தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஹவுஸ் ஓனர்' படத்தின் டிரைலர் வெளியீடு - கிஷோர்

கிஷோர் - லவ்லின் சந்திரசேகர் நடிப்பில் உருவாகி இருக்கும் `ஹவுஸ் ஓனர்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது.

File pic

By

Published : Jun 6, 2019, 3:33 PM IST

நடிகரும் இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `ஹவுஸ் ஓனர்'. பசங்க கிஷோர் நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் நாயகியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் ஆடுகளம் கிஷோர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

சென்னை வெள்ளத்தின்போது நடந்த ஒரு காதலை மையமாக வைத்து தீவிரமான காதல் கதையாக இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார். இப்படம் ஜூன் 21ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு கிருஷ்ணா சேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று (ஜூன் 6) வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details