தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மும்பை தாக்குதலின் உண்மை கூறும் 'ஹோட்டல் மும்பை' ரிலீஸ் தேதி அறிவிப்பு - மும்பையிலுள்ள தாஜ் மஹால் பேலஸ் ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல்

மும்பை: சொன்ன தேதியில் இந்தியா தவிர மற்ற நாடுகளில் ரிலீசாகி நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் பல்வேறு திரைப்பட விழாக்களிலும் பாராட்டுகளை குவித்துவரும் 'ஹோட்டல் மும்பை' திரைப்படம் தற்போது இந்திய ரசிகர்களுக்கு ட்ரீட்டாக வரும் நவம்பரில் வெளியாகவுள்ளது.

ஹோட்டல் மும்பை திரைப்படம்

By

Published : Oct 5, 2019, 3:19 PM IST

அந்தோணி மாரஸ் இயக்கியுள்ள 'ஹோட்டல் மும்பை' படத்தில் தேவ் படேல், ஆர்மி ஹம்மர், அனுபம் ஹேர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2008 நவம்பர் 26ஆம் தேதி மும்பையிலுள்ள தாஜ் மஹால் பேலஸ் ஹோட்டலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இதனை பயங்கரவாதிகள் எதிர்ப்புப் படையினர் மூன்று நாள்கள் போராடி முறியடித்தனர். இந்திய வரலாற்றில் மிகவும் மோசமான தாக்குதலாகக் கருதப்படும் இதன் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து 'ஹோட்டல் மும்பை' படம் தயாராகியுள்ளது.

இந்தப் படம் உலகம் முழுவதும் மார்ச் 29ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த நாளில் இந்தியா தவிர மற்ற நாடுகளில் ரிலீசாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், உலகம் முழுவதும் புகழ்பெற்ற திரைப்பட விழாக்களில் திரையிடப்படுவதுடன், பாராட்டுகளையும் குவித்துவருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் புதிய ரிலீஸ் தேதியை படத் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். அதன்படி நவம்பர் மாதம் 22ஆம் தேதி ரிலீசாகும் என தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் துணிச்சலையும் வீரியத்தையும் எடுத்துரைக்கும் விதமாக அமைந்துள்ள இந்தப் படத்தை இந்திய ரசிகர்கள் முன்னிலையில் காட்டப்படவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details