தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நல்ல வரவேற்பைப் பெற்ற ஹாஸ்டல் டீசர்! - hostel teaser released

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹாஸ்டல்' படத்தின் டீசர் வெளியாகி யூ-ட்யூப் தளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

ஹாஸ்டல்
ஹாஸ்டல்

By

Published : Jul 23, 2021, 4:57 PM IST

சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஹாஸ்டல்'. ரவீந்திரன் தயாரித்துள்ள இப்படத்தில் சதீஷ், நாசர், கிரிஷ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான நிலையில் படத்தின் டீசரை படக்குழு கடந்த வாரம் வெளியிட்டுள்ளது.

பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் நுழைய ஆசைப்படும் பிரியா பவானி சங்கர், அசோக் செல்வனிடம் தனது ஆசையைக் கூறுகிறார். பிறகு அவர் ஹாஸ்டலில் என்னவெல்லாம் செய்கிறார், எப்படி மறைந்து வாழ்கிறார் என்பதை நகைச்சுவை கலந்த பாணியில் உருவாக்கியுள்ளார் சுமந்த் ராதாகிருஷ்ணன்.

ஹாஸ்டல் டீசர்

இந்நிலையில் நகைச்சுவைக்குப் பஞ்சமில்லாமல் வெளியாகியுள்ள இந்த டீசர் யூ-ட்யூப் தளத்தில் 800k (8 லட்சம்) பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துவருகிறது. விரைவில் படத்தில் ட்ரெய்லர், வெளியீட்டுத் தேதி ஆகியவை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:எனிமி டீசர் தேதி அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details