நடிகர் ரஜினிகாந்த் நேற்றிரவு (அக்.28) சென்னை காவேரி மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். அவர் வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாக லதா ரஜினிகாந்த் தெரிவித்தார்.
இதனையடுத்து பரிசோதனையில் ரஜினிகாந்துக்கு, ரத்த நாள திசு அழிவு பாதிப்பு கண்டறியப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக ரத்த குழாய்களில் படியும் கொழுப்பை கரைக்கும் ஆற்றலை உடல் இழக்கும்போது நெக்ரோசிஸ் (necrosis) எனப்படும் பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ”நடிகர் ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று அனுமதிக்கப்பட்டார்.
காவேரி மருத்துவமனை அறிக்கை மருத்துவர்களின் ஆலோசனைப்படி ரஜினிகாந்தின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் இருந்த அடைப்பு சரி செய்யப்பட்டது. நடிகர் ரஜினிகாந்த் அடுத்த சில நாள்களில் வீடு திரும்புவார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ரஜினிகாந்த்துக்கு ரத்த குழாய் திசு அழிவு பாதிப்பு: வெளியான தகவல்