2017ஆம் ஆண்டு முன்னணி மலையாள நடிகை படப்பிடிப்பை முடித்துவிட்டு வீடு திரும்புகையில் ஒரு கும்பலால் கடத்தப்பட்டார். பின்னர் அதுதொடர்பாக பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு ஆதரவாக மலையாள நடிகர் சங்கம் செயல்பட்டதாகக் கூறி பல நடிகைகள் விலகினர்.
இந்த நிலையில் தற்போது அம்மா பொதுச் செயலாளர் இடவேலா பாபு நேர்காணல் ஒன்றில், நடிகர் சங்கத்துக்கு நிதி திரட்ட எடுத்த படத்தின் இரண்டாம் பாகத்தில் கடத்தப்பட்ட நடிகை குறித்து கேட்டதற்கு, சங்கத்திலிருந்து விலகியவர் எப்படி நடிப்பார்கள் என சர்ச்சைக்குரிய வகையில் பதிலளித்துள்ளார்.