தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'பிகில்' ட்ரெய்லரை பார்த்து கேள்வியெழுப்பிய ஹாலிவுட் பிரபலம்! - அட்லீ

ஆக்‌ஷன், காமெடி, ரொமான்ஸ், மிரட்டலான பின்னணி இசை, மாஸ் காட்சிகள் என விஜய் படத்துக்கே உண்டான அனைத்து அம்சங்களுடன் பிகில் படத்தின் ட்ரெய்லர் அமைந்துள்ளது.

bigil

By

Published : Oct 14, 2019, 12:09 PM IST

Updated : Oct 15, 2019, 2:30 PM IST

பிகில் படம் அமெரிக்காவில் திரையிடப்படுவது குறித்து ஹாலிவுட் இயக்குநரும் நடிகருமான பில் டியூக் தனது சமூக வலைதளத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.

அட்லி - விஜய் கூட்டணியில் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'பிகில்' தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுவருகிறது. அதேபோல் கோலிவுட், பாலிவுட் நட்சத்திரங்களும் ட்ரெய்லர் குறித்து தங்களது வாழ்த்துகளையும் கருத்துகளையும் பகிர்ந்துவருகின்றனர்.

அட்லீ ட்விட்

இந்நிலையில், பிகில் ட்ரெய்லரை பார்த்த ஹாலிவுட் இயக்குநரும் நடிகருமான பில் டியூக் தனது சமூக வலைதளத்தில் பிகில் ட்ரெய்லர் சிறப்பாக உள்ளது. இப்படம் அமெரிக்காவில் எப்போது ரிலீஸாகும்? இந்த படத்தின் சிறப்பு காட்சி அமெரிக்காவில் திரையிடப்பட உள்ளதா? அப்படி இருந்தால் எனக்கு தெரிவியுங்கள் என்று கூறியதோடு படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த அட்லி, நன்றி சார் நிச்சயமாக அமெரிக்காவில் சிறப்பு காட்சி குறித்த தகவலை தெரிவிக்கிறேன் என்றார். பிகில் படம் வெளியாவதற்கு முன்பே ஹாலிவுட் பிரபலம் பாராட்டியுள்ளது படக்குழுவினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிங்க: 'எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்': அர்ச்சனா கல்பாத்தி ட்வீட்!

Last Updated : Oct 15, 2019, 2:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details