தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மோடியை ஓரங்கட்டிய காண்ட்ராக்டர் நேசமணி!

மோடியை ஓரங்கட்டி காண்ட்ராக்டர் நேசமணி டிரெண்டிங்கில் இருப்பது இந்திய அளவில் கவனம் பெற்றுள்ளது.

vadivelu

By

Published : May 30, 2019, 4:22 PM IST

நேசமணி உருவான கதை

Civil Engineering learners எனும் பேஸ்புக் பக்கத்தில் சுத்தியல் படத்தை பதிவிட்டு இதை உங்கள் நாட்டில் எப்படி அழைப்பீர்கள் என ஒருவர் கேள்வி எழுப்பினார். இதுக்கு பேர் சுத்தியல், இதால எதையாவது தட்டுனா ‘டங் டங்’ என்று சத்தம் வரும். ஜமின் அரண்மனையில நேசமணியின் அண்ணன் மகன் அவர் மண்டையை இதாலதான் உடைச்சான் என ‘ப்ரெண்ட்ஸ்’ படத்தில் இடம்பெற்ற வடிவேலு காமெடியை குறிப்பிட்டு நக்கலாக பதிலளித்தார். அவருக்கு இப்ப உடல்நிலை எப்படி இருக்குனு இன்னொருத்தர் கேட்க, இப்ப பரவாயில்லைனு கலாய்ச்ச நபர் பதிலளிக்க, #Pray_for_Neasamani பிறந்தது.

காண்ட்ராக்டர் நேசமணி உருவான கதை


உலக அளவில் டிரெண்டாகி சாதனை படைத்திருக்கிறார் நம் காண்ட்ராக்டர் நேசமணி. மோடி இரண்டாவது முறையாக பிரதமர் பதவி ஏற்கப்போவது டிரெண்டிங்ல இருக்கும் என்று எதிர்பார்த்த சூழலில், மோடியை ஓரங்கட்டிட்டு நேசமணி ட்ரெண்டிங்கில் இருக்கிறார்.

இது குறித்து உண்மையான நேசமணி (வடிவேலு), ”அது ஆண்டவன் கொடுத்த பரிசு” என்று எளிமையாக கூறியிருக்கிறார். திரைப்பட வாய்ப்புகள் பெரிதாக இல்லையென்றாலும் வடிவேலுதான் சமூக வலைதளங்களின் ராஜா. யாரை கலாய்க்க தோன்றினாலும், கைகள் வடிவேலு போட்டோவை தேடுவது பலருக்கு அனிச்சை செயலாகிவிட்டது. இந்த நேரத்தில் சில அரசியல் காரணங்களால், வடிவேலு தொடர்ந்து நடிக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதை எண்ணி பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

உள்ள திரியிறது பல ரூபங்கள் - வடிவேலு காமெடி

மக்களை மகிழ்வித்த ஈடு இணையற்ற கலைஞர்களில் வடிவேலுக்கு என்றுமே தனி இடம் உண்டு. நேசமணி டெவலப்பாகி பல ரூபங்கள் எடுத்துவிட்டார். இதையும் வடிவேலுவே ஒரு காமெடியில் கூறியிருப்பார். “யோவ் வெளிய தெரியிறது ஒரு உருவம், ஆனா உள்ள திரியிறது பல ரூபங்கள். அதெல்லாம் வெளிய நடமாடவிட்டா பூமி தாங்காதேனு உள்ள ஒரு ஓரமா படுக்கப்போட்ருக்கேன் போவியா”.. என்பார். நேசமணி கடைசியாய் வடிவாக வந்து ‘சில்லாக்கி டும்மா’ சொல்லிட்டு போனார், ஆளையே காணோம்.

சில்லாக்கி டும்மா

சமூக வலைதளவாசிகள் எல்லாம் ஒருமித்த குரலாக கூறுவது ஒன்றுதான் ‘மிஸ் யூ வடிவேலு’.

ABOUT THE AUTHOR

...view details