தமிழ் திரைத்துறையில் ஹிப்ஹாப் ஆதி இசை அமைப்பாளராக அறிமுகமாகி பின்னர் 'மீசையை முறுக்கு' படத்தின் மூலம் ஹீரோ மற்றும் இயக்குநர் ஆனார். இவர் தற்பொழுது 'அன்பறிவு' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முன்னணி நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.
இரட்டை வேடத்தில் நடிக்கும் ஆதி? - அன்பறிவு பட அப்டேட்
சென்னை: முதல் முறையாக ஹிப்ஹாப் ஆதி இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக காஷ்மீரா நடிக்கிறார். மேலும் நெப்போலியன், விதார்த், சரத்குமார், ஊர்வசி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்ய பிரதீப் ராகவ் எடிட்டிங் பணியை மேற்கொள்கிறார். அஸ்வின் ராம் இயக்கும் இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதி முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பொள்ளாச்சியில் மும்முரமாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிவடையவுள்ளது.
இதையும் படிங்க: சத்யஜோதி பிலிம்ஸின் அடுத்தப் படத்தில் 'ஹிப்ஹாப் ஆதி'