முன்னணி தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் சத்யஜோதி பிலிம்ஸ் மூன்று தலைமுறை ஹீரோக்களை வைத்து படமெடுத்துள்ளது. டி.தியாகராஜனின் சத்யஜோதி பிலிம்ஸ் அஜித்தை வைத்து 'விவேகம்', 'விஸ்வாசம்' ஆகிய படங்களையும் விஜய்யை வைத்து 'பைரவா' படத்தையும் தனுஷை வைத்து 'பட்டாஸ்' படத்தையும் தயாரித்துள்ள இந்நிறுவனம், தற்போது ஹிப்ஹாப் ஆதியை வைத்து புதிய படத்தை தயாரிக்கிறது.
சத்யஜோதி பிலிம்ஸின் அடுத்தப் படத்தில் 'ஹிப்ஹாப் ஆதி'
ஹிப்ஹாப் ஆதியின் நடிப்பில் உருவாகும் 'அன்பறிவு' படத்தின் படப்பிடிப்பு இன்று (டிசம்பர் 14) பூஜையுடன் தொடங்கியது.
Anbarivu
'அன்பறிவு' என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று (டிசம்பர் 14) தொடங்கியுள்ளது. இதனை அஸ்வின் ராம் இயக்குகிறார். ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக காஷ்மீரா நடிக்கிறார். மேலும் நெப்போலியன், விதார்த், சரத்குமார், ஊர்வசி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்ய பிரதீப் ராகவ் எடிட்டிங் பணியை மேற்கொள்கிறார்.