தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஹிப் ஹாப் ஆதியின் 'சிவகுமாரின் சபதம்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில்! - ஹிப் ஹாப் ஆதியின் சிவகுமாரின் சபதம்

ஹிப் ஹாப் ஆதியின் 'சிவகுமாரின் சபதம்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

hiphop
hiphop

By

Published : Jun 28, 2021, 8:19 PM IST

நடிகராகவும் இயக்குநராகவும் இசையமைப்பாளராகவும் ஹிப் ஹாப் ஆதி அறிமுகமான படம் 'மீசைய முறுக்கு'. இதில், விவேக், ஆத்மிகா, விக்னேஷ்காந்த், விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 2017ஆம் ஆண்டு வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின் ஆதி எந்தவொரு படமும் இயக்கவில்லை.

'மீசைய முறுக்கு' படத்திற்கு பின் வெளியான 'நட்பே துணை', 'நான் சிரித்தால்' படங்களில் ஹிப் ஹாப் ஆதி நாயகனாகவும் இசையமைப்பாளராகவும் இருந்தார்.

தற்போது மீண்டும் ஆதி 'சிவகுமாரின் சபதம்' படத்தை இயக்கி நடித்து வருகிறார். மேலும் அவரே இந்தப் படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

சத்யஜோதி தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிக்கும் கதாநாயகி, துணை கதாபாத்திரங்கள் குறித்தான எந்தவொரு விவரமும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில், 'சிவகுமாரின் சபதம்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

'சிவகுமாரின் சபதம்' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், டப்பிங், இசைக்கோர்ப்பு உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. திரையரங்கில் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: செல்லதுரை தாத்தா குறித்து ஹிப்ஹாப் ஆதியின் வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details