கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான 'மரகத நாணயம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், ஏஆர்கே சரவண்.
'ஹாரர் காமெடி' படமான இந்தத் திரைப்படத்தில் நடிகர் ஆதி, நிக்கி கல்ராணி உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்திருந்தனர்.
சாபம் விடுக்கப்பட்ட பொக்கிஷமொன்றை தேடி அலைவதாக வடிவமைக்கப்பட்ட இந்த திரைக்கதை, மக்களை வெகுவாக கவர்ந்து, பொருளாதார ரீதியாக படத்தை நல்ல வெற்றியைப் பெறச்செய்தது.