தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'இண்டிபெண்டென்ஸ் டே'வில் வெளியாகும் ஹிப் ஹாப் ஆதியின் இண்டிபெண்டென் இசை ஆல்பம்

சென்னை: இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி 'நான் ஒரு ஏலியன்' என்னும் இண்டிபெண்டென் இசை ஆல்பத்தை விரைவில் வெளியிட உள்ளார்.

நான் ஒரு ஏலியன்
நான் ஒரு ஏலியன்

By

Published : Aug 5, 2020, 12:22 PM IST

தமிழில் 2012ஆம் ஆண்டில் இசையமைப்பாளர் ஆதியின் இசையில் வெளிவந்த 'ஹிப்ஹாப் தமிழன்' ஆல்பம் மூலம் ராப் என்னும் மேற்கத்திய இசையில் பாடல் வெளியானது. இதனை Think music வெளியிட்டிருந்தது. இந்தியாவின் முதல் தமிழ் ஹிப்ஹாப் ஆல்பம் இதுவாகும்.

திரையிசைப் பாடல்கள் பெரிதும் விரும்பப்பட்ட காலகட்டத்தில் ஆல்பமான 'ஹிப்ஹாப் தமிழன்'
வெளியாகி, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இண்டிபெண்டென் இசை ஆல்பமாக ஒரு அதிர்வை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.

'ஹிப் ஹாப்' என்பது ஒரு இசைக் கலை என்பதையும் தாண்டி, ஹிப்ஹாப் ஆதியின் பெயராகவே அது மாறிவிட்டது. ஹிப்ஹாப் ஆதி, வெற்றிகரமான நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியராகவும் புகழ் பெற்றுள்ளார்.

இவர் தற்போது மீண்டும் ஒரு இண்டிபெண்டென் இசை ஆல்பத்தை வெளியிடவுள்ளார். வரும் சுதந்திர தினத்தன்று திரைப்படங்கள் சாராத 'நான் ஒரு ஏலியன்' (Naa oru Alien) என்ற ஆல்பத்தை வெளியிடுகிறார், ஹிப்ஹாப் தமிழா ஆதி

ABOUT THE AUTHOR

...view details