தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் 'நான் சிரித்தால்' படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீடு - Hip-Hop Aadhi naan sirithal

சுந்தர்.சி தயாரிப்பில் ஹிப் ஹாப் ஆதி நாயகனாக நடித்துள்ள 'நான் சிரித்தால்' படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியிடப்பட்டுள்ளது.

hip-hop aathi starer naan sirithal, நான் சிரித்தால் படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீடு
hip-hop aathi starer naan sirithal

By

Published : Dec 8, 2019, 6:00 PM IST

அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி தயாரிக்கும் 'நான் சிரித்தால்' படத்தில் 'ஹிப் ஹாப்' ஆதி நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் 'பிரேக் அப்' என்ற பாடலின் வெளியீடு சென்னையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் நடைபெற்றது.

பொதுமக்கள் மத்தியில் நடைபெற்ற இந்தப் பாடல் வெளியீட்டு விழாவில், சிறந்த சிரிப்புக்கான வித்தியாசமான போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் கலந்து கொள்பவர்கள் தங்களது சிரிப்பை மொபைலில் பதிவு செய்து, இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதில் 10 பேரின் சிரிப்பைத் தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்கப்பட உள்ளன.

hip-hop aathi starer naan sirithal

இதனைத் தொடர்ந்து ஹிப் ஹாப் ஆதி, சினிமா துறையில் கடந்து வந்த பாதை குறித்த குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. இதனையடுத்து 'பிரேக் அப்... பிரேக் அப் எனக்கு பிரேக் அப்... வலிக்குதா வலிக்குதா நெஞ்சுக்குள்ள' பாடலின் சிங்கிள் டிராக் வெளியிடப்பட்டது. இந்தப் பாடலை ஆதியே எழுதி இசையமைத்திருக்கிறார். அவரைப் போலவே சுயதீனப் பாடகர்களை அழைத்து பாட வைத்துள்ளார்.

இப்படத்தின் மீதமுள்ள இரண்டு பாடல்களில் ஒன்றை கோயம்புத்தூரிலும், மற்றொரு பாடலை மதுரையிலும் வெளியிடவுள்ளனர். இந்தப் பயணத்திற்கு 'நான் சிரித்தால்' மியூசிக் டூர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

சத்தீஷ்கரில் சிறுவனுக்குப் பாலியல் துன்புறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details