நகைச்சுவை நடிகர் யோகிபாபு நடிப்பில் முத்துக்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தர்மபிரபு. கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியான இத்திரைப்படத்தில் சிவன், முருகன், விநாயகர் போன்ற இந்து மத கடவுள்களையும் இந்து மத நம்பிக்கைகளையும் இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும், பிற மத கடவுள்களை உயர்வாக காட்டும் வகையில் இருப்பதாகவும் கூறி நெல்லை மாவட்ட இந்துமுன்னணியினர், தர்மபிரபு படத்தை திரையிட்ட திரையரங்கினை முற்றுகையிட்டனர்.
'தர்மபிரபு படத்தினை தடை செய்..!' - இந்து முன்னணி போராட்டம்
நெல்லை: யோகிபாபு நடிப்பில் வெளியாகியுள்ள தர்மபிரபு படத்தினை தடை செய்யக்கோரி இந்து முன்னணியினர், திரையரங்கை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபிரபு திரைப்படத்தினை தடை செய்..! இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்.
தர்மபிரபு திரைப்பட சுவரொட்டிகளை கிழித்தும், இத்திரைப்படத்தை தடைசெய்யக்கோரியும் கோஷங்களை எழுப்பினர். இவர்களிடம் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு கலைந்து சென்றனர்.