தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

திரௌபதி படத்திற்கு கேக் வெட்டிய இந்து மகா சபையினர்! - Draupathi movie updates

மயிலாடுதுறை: திரௌபதி திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையங்கம் முன்பு இந்து மகா சபையினர் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

திரௌபதி பட திரையரங்கின் முன் கேக் வெட்டிய இந்து மகா சபையினர்
திரௌபதி பட திரையரங்கின் முன் கேக் வெட்டிய இந்து மகா சபையினர்

By

Published : Mar 1, 2020, 10:20 PM IST

வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய மோகன். ஜி இயக்கத்தில் உருவான திரௌபதி திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை தமிழ்நாடு முழுவதும் வெளியானது.

சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் சுமார் 300 திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனிடையே தற்போது நாகை மாவட்டம், மயிலாடுதுறையைச் சேர்ந்த இந்து மகா சபையினர், அம்மாவட்டத்தில் திரௌபதி திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கம் முன்பு கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட செயலாளர் மினேஷ் தலைமையில் கேக் வெட்டிய இந்து மகா சபையினர், படம் பார்த்துவிட்டு வெளியே வந்தவர்களுக்கு கேக் வழங்கி மகிழ்ச்சியடைந்தனர்.

திரௌபதி பட திரையரங்கின் முன் கேக் வெட்டிய இந்து மகா சபையினர்

தொடர்ந்து இதுகுறித்து பேசிய மினேஷ், திரௌபதி அனைத்து சமுதாய மக்களும் பார்க்க வேண்டிய திரைப்படம் என்றும், பெற்றொர்கள் அனுமதியுடன் பெண்கள் திருமணம் செய்ய வேண்டும் என்றும் கூறினர்.

இதையும் படிங்க:'திரௌபதி' படம் எப்படி இருக்கு?

ABOUT THE AUTHOR

...view details