தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மால்தீவ்ஸில் நண்பருடன் விடுமுறையை கழிக்கும் டாப்ஸி! - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

நடிகை டாப்ஸி தனது மால்தீவ்ஸில் நண்பருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

டாப்சீ
டாப்சீ

By

Published : Oct 14, 2020, 5:39 PM IST

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர் டாப்ஸி. இவர் தற்போது தனது விடுமுறையை மால்தீவ்ஸில் கொண்டாடி வருகிறார். அங்கு தனது சகோதரி மற்றும் எவனியா பன்னுடன் இவர் சென்றுள்ள புகைப்படம் அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் நடிகை டாப்ஸி மாலத்தீவிற்கு தனது பாய்பிரெண்ட் மத்தியாஸ் போய்யுடன் (Mathias Boe) சென்றுள்ளதை இத்தனை நாள்களாக ரகசியம் காத்து வந்துள்ளார். தற்போது அங்கு அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அப்புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவரும், டென்மார்க்கைச் சேர்ந்த சர்வதேச பேட்மிண்டன் வீரரான மத்தியாஸ் போய்யும் இரண்டு ஆண்டுகளாக டேட்டிங் செய்ததாக கூறப்படுகிறது.

டாப்ஸி தற்போது ரஷ்மி ராக்கெட் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அத்திரைப்படம் தொடங்க இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில், அவர் விடுமுறையை கொண்டாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மலையாள நடிகர் சங்கத்திலிருந்து நடிகை பார்வதி விலகல்!

ABOUT THE AUTHOR

...view details