வாட்ச்மேன் திரைப்படம் குறித்து அவர் பேசுகையில், என் ஆரம்ப காலத்திலிருந்தே வித்தியாசமானக் கதைகளை உருவாக்க முயற்சித்து வருகிறேன். இந்த படத்தை பற்றி துல்லியமாக சொல்லவேண்டுமென்றால், ஹீரோவுக்கு இணையாக நாய் நடிக்கும் த்ரில்லர் படம். பிரபலமான ஹீரோவுடன் நாய் நடிக்கும் ஒரு த்ரில்லர் படத்தை எடுக்கும் எண்ணம் எனக்கு இருந்தது. அதுதான் இந்த படம் உருவாகக் விதையாக இருந்தது. ’வாட்ச்மேன்’ திரைப்படத்தின் தலைப்பை வைத்தே இதன் கதைகளத்தை ரசிகர்கள் யூகித்திருப்பார்கள். இரண்டு நாளில் நடக்கும் இந்த கதையில் கதாபாத்திரங்கள் ஒருவருக்கொருவர் மோதிகொள்ளும் வகையில் திரைக்கதை இருக்கும் எனக் கூறினார்.
இது ஹீரோவுக்காக எழுதப்பட்ட கதை - ஏ.எல்.விஜய் பேட்டி! - யோகி பாபு
இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'வாட்ச்மேன்' திரைப்படம் ஏப்ரல் 12 ஆம் தேதி வெளியாகிறது.
வாட்ச்மேன் படத்தின் ஹீரோ ஜி.வி.பிரகாஷ் குமார் பற்றி கூறும்போது, எனது ஆரம்ப காலத்திலிருந்தே என் படங்களில் அவர் இருப்பார். நீண்ட காலமாக பயணித்து வருகிறோம். இதுவரை 11 படங்களில் ஒன்றாகப் பணியாற்றியுள்ளோம். அவரது இசை மிகச்சிறப்பாக இருக்கும். பாலா சார் இயக்கிய நாச்சியார் படத்தில், அவரது நடிப்பை பார்த்து வியந்துபோனேன். இந்த வாட்ச்மேன் படத்தில் வரும் கதாபாத்திரத்துக்கு அவரைத் தவிர யாரையும் யோசிக்க முடியவில்லை. இந்த கதாபாத்திரத்துக்காக மிகக்கடுமையாக உழைத்தார். ரிஸ்க்கான விஷயங்களை பொருட்படுத்தாமல் செய்தார். நாயுடனான காட்சிகள் சரியாக அமைவதற்கு பொறுமை தேவை. ஜி.வி.யின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்தப் படம் சாத்தியமே இல்லை எனத் தெரிவித்தார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் - ஏ.எல்.விஜய் கூட்டணி இணைந்துள்ளதால் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், கடந்த வாரம் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் குப்பத்துராஜா திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.