சிவகார்த்திகேயன் - 'இரும்புத்திரை' படத்தின் இயக்குநர் பி.எஸ். மித்ரன் கூட்டணியில் உருவாகி வரும் படம் 'ஹீரோ'. இதில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும், 'இரும்புத்திரை' படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
'ஹீரோ' சிவகார்த்திகேயனின் அடுத்த அவதாரம் 'டாக்டர்' - டாக்டர் படத்தின் அப்டேட்
'ஹீரோ' படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள புதிய படத்தின் டைட்டிலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
!['ஹீரோ' சிவகார்த்திகேயனின் அடுத்த அவதாரம் 'டாக்டர்' hero](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5249823-299-5249823-1575333330499.jpg)
இவர்களுடன் நாச்சியார் படத்தில் நடித்த இவானா, பாலிவுட் நடிகர் அபய் தியோல், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதனையடுத்து, சிவகார்த்திகேயன், கேஜேஆர் ஸ்டுடியோஸூடன் தனது செந்த தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து 'டாக்டர்' என்னும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இயக்குநர் நெல்சன் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.