சிவகார்த்திகேயன் - ‘இரும்புத்திரை’ பட இயக்குநர் பி.எஸ். மித்ரன் கூட்டணியில் உருவாகிவரும் படம் 'ஹீரோ'. இதில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும், ’இரும்புத்திரை’ படத்தை தொடர்ந்து இந்தப் படத்திலும் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
வாங்க ப்ரோ ஒரு டான்ஸ போடுவோம்: 'ஹீரோ' மால்டோ கிட்டபுலே சிங்கிள் ட்ராக்! - ஹீரோ சினிமா வெளியாகும் தேதி
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் ஹீரோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் தற்போது வெளியாகியுள்ளது.
![வாங்க ப்ரோ ஒரு டான்ஸ போடுவோம்: 'ஹீரோ' மால்டோ கிட்டபுலே சிங்கிள் ட்ராக்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4980113-780-4980113-1573050036039.jpg)
sivakarthikayen
இவர்களுடன் நாச்சியார் படத்தில் நடித்த இவானா, பாலிவுட் நடிகர் அபய் தியோல், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் தற்போது வெளியாகியுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 20ஆம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவித்திருந்தது.