தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கம்பீர தோற்றத்தில் இலியானா- 'தி பிக் புல்' பட போஸ்டர் வெளியீடு! - இலியானா

'தி பிக் புல்' படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

தி பிக் புல்
தி பிக் புல்

By

Published : Aug 18, 2020, 4:46 PM IST

இயக்குநர் குக்கி குலாடி இயக்கத்தில் அபிஷேக் பச்சன், இலியானா நடிக்கும் திரைப்படம் 'தி பிக் புல்'. அஜய் தேவ்கன் இத்திரைப்படத்தைத் தயாரித்துவருகிறார்.

'போல் பச்சன்' திரைப்படத்திற்குப் பிறகு, அஜய் தேவ்கன் தயாரிக்கும் இப்படத்தில் அபிஷேக் பச்சன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 'தி பிக் புல்' படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இலியானா கறுப்பு நிற உடை அணிந்து, மிகவும் கம்பீர தோற்றத்தில் உள்ளார். அப்புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

ஸ்டாக் மார்க்கெட்டில் 1980 முதல் 1990 வரை பல குற்றங்களைச் செய்த ஹர்ஷத் மேத்தாவின் வாழ்க்கையைத் தழுவி இத்திரைப்படம் உருவாகிவருவதாகக் கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details