நாடு முழுவதும், இன்று (ஆக.3) ரக்சா பந்தன் கொண்டாடப்பட்டு வருகிறது. அண்ணன், தங்கை மற்றும் அக்கா, தம்பிக்கு இடையேயான உறவைப் போற்றும் வகையில் இது கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், நடிகர் ஆயுஷ்மான், வழக்கம் போல் தனது ஸ்டைலில் ரக்சா பந்தன் குறித்து பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
"பெண் பாதுகாப்பிற்காக சகோதரனை நம்ப வேண்டியதில்லை" - ஆயுஷ்மான்! - ayushmann dedicates poem to sisters
நடிகர் ஆயுஷ்மான் ரக்சா பந்தன் குறித்து கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.
ஆயுஷ்மான்
அதில், “ ஒரு பெண் தனது பாதுகாப்பிற்காக தனது சகோதரனை நம்ப வேண்டியதில்லை. அதுவும் பொதுவில் பாதுகாப்பாக உணர அண்ணனை தேடத் தேவையில்லை. என்னைப் பொறுத்தவரை ராக்கி கட்டுவது ஒரு முற்போக்கான செயல் போல் தோன்றுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.