நடிகர் சந்தானம்-இயக்குநர் விஜய் ஆனந்த் கூட்டணியில் உருவாகிவரும் திரைப்படம் 'டகால்டி'. 18 ரீல்ஸ் மற்றும் ஹேண்ட்மேட் பிலிம்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்தில், சந்தானத்திற்கு ஜோடியாக அறிமுக நடிகை ரித்திகா சென் நடிக்கிறார். யோகிபாபு, ராதாரவி, ஸ்டண்ட் சில்வா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
விஜய் நரேன் இசையமைக்கிறார். தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்கிறார்.
முன்னதாக இப்படத்தின் ஃபஸ்ட் லுக், செக்கண்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில், தற்போது இப்படத்தின் டீஸரை படக்குழு வெளியிட்டுள்ளது.