தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தயாரிப்பாளர் சங்கம் தேர்தல் எப்போது? விளக்கமளிக்க உத்தரவு

சென்னை: தயாரிப்பாளர் சங்கத்துக்கு தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு அலுவலரின் பதவிக்காலத்தை மேலும் ஒரு வருடத்துக்கு நீட்டித்துள்ளதற்கு, விஷால் தரப்பினர் ஆட்சேபனை தெரிவித்த நிலையில், தேர்தல் எப்போது நடத்தப்படும் என்று அரசு விளக்கம் அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

producer council election
Tamil Film producers council

By

Published : Feb 6, 2020, 1:10 PM IST

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு 2019 ஏப்ரல் 30ஆம் தேதியுடன் முடிவடைந்ததால் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்டப் பதிவாளரான என்.சேகர் என்பவரை தனி அலுவலராக தமிழ்நாடு வணிகவரித்துறை நியமித்து உத்தரவிட்டது.

இந்த தனி அலுவலரை நியமித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்த விஷால் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம், தனி நிர்வாகியின் நியமனத்துக்குத் தடை விதிக்க மறுத்ததுவிட்டது. மேலும், சேகர் என்பவர் பதவி உயர்வு பெற்று கடந்த ஜனவரி மாதம் பணிமாறுதல் ஆனதால் அந்தப் பதவிக்கு புதிய சிறப்பு அலுவலரை தமிழ்நாடு அரசு நியமித்தது. அந்த அலுவலர் ஒரு வருட காலம் நீடிப்பார் எனவும் அரசாணை பிறப்பித்தது.

இதையடுத்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறப்பு அலுவலர் பதவி காலம் மார்ச் மாதம் முடிவடைவதால் மேலும் ஒரு வருடத்துக்கு புதிய சிறப்பு அலுவலரை நியமித்து அரசாணை பிறபித்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்

இதற்கு ஆட்சேபனை தெரிவித்த விஷால் தரப்பு வழக்கறிஞர், தயாரிப்பாளர் சங்கத்துக்கு தமிழ்நாடு அரசு நியமித்த சிறப்பு அலுவலர் பதவி காலம் மார்ச் மாதம் முடிவடைவதால், தயரிப்பாளர் சங்க தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும் என்று வாதிட்டார். அத்துடன், தமிழ்நாடு அரசு மேலும் ஒரு வருடத்துக்கு சிறப்பு அலுவலரை நியமித்தது சட்டத்துக்கு விரோதமானது என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நீதிபதி செந்தில்குமார், தயாரிப்பாளர் சங்கம் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டார். மேலும், வழக்கின் விசாரணையை 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details