அனுமதியின்றி இளையராஜா பாடலை பயன்படுத்த தடை - உயர்நீதி மன்றம் - உயர் நீதிமன்றம்
2019-06-04 17:12:33
சென்னை: இளையராஜாவின் பாடல்களை அவரின் அனுமதியின்றி பயன்படுத்துவதற்கு சென்னை உயர்நீதி மன்றம் தடைவிதித்துள்ளது.
தனது பாடல்களை அனுமதியின்றி பொதுமேடைகளில் பயன்படுத்தக் கூடாது என்று இளையராஜா தெரிவித்திருந்தார். இதையடுத்து அகி நிறுவனம் இளையராஜா தனது பாடல்களுக்கு ராயல்டி தொகை கேட்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இளையராஜாவின் பாடல்களை அவரின் அனுமதியின்றி பயன்படுத்துவதற்கு விதித்திருந்த இடைக்காலத் தடையை உறுதி செய்து உத்தரவிட்டது. மேலும் அகி நிறுவனம் தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்தது.
பாடல்களுக்கு ராயல்டி கேட்ட விவகாரத்தில் இளையராஜா மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் இந்த தீர்ப்பு அவரது ரசிகர்களை மகிழ்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்த விவகாரத்தால் பிரிந்த இளையராஜா - எஸ்.பி.பி கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளனர்.