தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஹெச்பிஓ மேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்த பேட்மேன் பட இயக்குநர்! - பேட்மேன் பட இயக்குநர்

பேட்மேன் திரைப்பட இயக்குனர் மாட் ரீவ்ஸ் ஹெச்பிஓ மேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சீரிஸ் ஒன்றை இயக்கவுள்ளார்.

Batman
Batman

By

Published : Jul 11, 2020, 4:32 PM IST

நைட்டீஸ் (90) கிட்ஸ்களின் ஃபேவரட் கார்ட்டூன் நிகழ்ச்சியில் ஒன்றானது பேட்மேன் நிகழ்ச்சி. கோதம் நகரத்தில் நடைபெறும் அசம்பாவிதங்களை காக்கும் ஹீரோவாக பேட்மேன் அதில் தோன்றி இருப்பார்.

இந்நிலையில், தற்போது பேட்மேன் திரைப்பட இயக்குனர் மாட் ரீவ்ஸ் மற்றும் ஹெச்பிஓ மேக்ஸ் நிறுவனம் ஒரு சீரிஸ் மூலம் இணைந்துள்ளது. டெரன்ஸ் விண்டர் இந்த சீரிஸின் கதையை எழுதவுள்ளர்.

இதுகுறித்து இயக்குநர் மாட் ரீவிஸ் கூறுகையில், "இது ஒரு அற்புதமான வாய்ப்பு. இதில் நான் உருவாக்கும் கதாபாத்திர மக்களின் ஆள் மனதில் நிலைத்து நிற்கும்" என்று கூறியுள்ளார்.

விரைவில் இந்த சீரிஸில் பணியாற்றியுள்ள மற்ற நடிகர்கள் நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹெச்பிஓ மேக்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள இந்த சீரிஸ் மீது தற்போதே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details