நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகரும் கூட.
இவர் 2002ஆம் ஆண்டு நந்தனம் என்ற மலையாள மொழித் திரைப்படத்தின் மூலம் திரைப்படத் துறைக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பாரிஜாதம், மொழி, கண்ணாமூச்சி ஏனடா, நினைத்தாலே இனிக்கும், ராவணன், உருமி உள்ளிட்ட 80-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் நன்கு அறிமுகமான நடிகர் ஆனார்.
நந்தனம் திரைப்படத்தில் அறிமுகம்
இவர் 2006ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றார். 1982ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் பிறந்தார். இவரின் தந்தை சுகுமாரன் ஒரு நடிகர். தாயார் மல்லிகா சுகுமாரனும் ஒரு நடிகை. இவருக்கு இந்திரஜித் சுகுமாரன் என்ற ஒரு மூத்த சகோதரர் உண்டு. இவர் மலையாளம், தமிழ்த் திரைப்படங்களில் நடித்துவருகின்றார்.
இவர் 2011ஆம் ஆண்டு பிபிசி இந்தியா தொலைக்காட்சி செய்தியாளர் சுப்ரியா மேனனைத் திருமணம் செய்துகொண்டார். இவர் 2002ஆம் ஆண்டு தனது 19 ஆவது வயதில் நந்தனம் என்ற திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரைப்படத் துறைக்கு அறிமுகமானார்.