தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

HBD நவ்யா நாயர் - cinema news

தமிழில் 'அழகிய தீயே' படத்தில் நடித்து பிரபலமான நடிகை நவ்யா நாயர் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார்.

hbd-navya-nair
hbd-navya-nair

By

Published : Oct 14, 2021, 10:46 AM IST

இஷ்டம் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமான நடிகை நவ்யா நாயர், சிறந்த நடிகைக்கான பல விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழில் 'அழகிய தீயே' படத்தில் நடித்து பிரபலமானார்.

நவ்யா நாயர்

தமிழில் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாசக்கிளிகள், மாயக்கண்ணாடி, சில நேரங்களில், ராமன் தேடிய சீதை உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

நவ்யா நாயர்

2010ஆம் ஆண்டு சந்தோஷ் மேனன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சாய் கிருஷ்ணா என்ற மகன் உள்ளார். இவர் திருமணத்திற்குப் பின் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

நவ்யா நாயர்

இவர், இப்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். டிவி நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று வருகிறார். இன்று இவர் தனது பிறந்தநாளைக் கொண்டாடிவரும் நிலையில் அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க : முடிவுக்கு வரும் மணி ஹெய்ஸ்ட்: வெளியான 'பார்ட் 2' டீசர்!

ABOUT THE AUTHOR

...view details