தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அசால்ட் சேதுக்கு பிறந்தநாள் - happy birthday Bobby Simha

நடிகர் பாபி சிம்ஹா இன்று தனது 38ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

HBD Bobby Simha
HBD Bobby Simha

By

Published : Nov 6, 2021, 7:04 AM IST

Updated : Nov 6, 2021, 7:24 AM IST

நடிகர் பாபி சிம்ஹா ’காதலில் சொதப்புவது எப்படி’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ’பீட்சா’, ’நான் ராஜவாக போகிறேன்’, ’சூது கவ்வும்’ போன்ற படங்களின் மூலமாக ரசிகர்களால் நன்கு அறியப்பட்டார்.

பின்னர், ’நேரம்’, ‘ஜிகர்தண்டா’,’ஒரு வடக்கன் செஃபி’, ’இஞ்சி இடுப்பழகி’,’உறுமீன்’,’பெங்களூர் நாட்கள்’, ’கோ-2’ போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் பாபி சிம்ஹா

இவர் நடித்த ’நேரம்’, ‘ஜிகர்தண்டா’ போன்ற படங்களில் எதிர்மறை நாயகனாக நடித்து அசத்தியிருப்பார். ஜிகர்தண்டா திரைப்படத்திற்காகச் சிறந்த துணை நடிகருக்கான விருது இவருக்குக் கிடைத்தது.

நடிகர் பாபி சிம்ஹா

இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். உறுமீன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த ரேஷ்மி மேனனை 2016 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

நடிகர் பாபி சிம்ஹா

இவர் இன்று தனது 38ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். பாபிக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் பாபி சிம்ஹா

இதையும் படிங்க : அழகே வியக்கும் 'விநோதய சித்தம்' ஷெரினா!

Last Updated : Nov 6, 2021, 7:24 AM IST

ABOUT THE AUTHOR

...view details