பில்லா 2, சூது கவ்வும் ஆகிய படங்களில் குணச்சித்திர நாயகனாக அறிமுகமானவர் நடிகர் அசோக் செல்வன். இந்த படத்தைத் தொடர்ந்து தெகிடி, வில்லா, 144 ஆகிய படங்களில் நாயகனாக நடித்தார்.
இதைத் தொடர்ந்து தற்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார்.
கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, இவரது நடிப்பில் ‘தீனி’ திரைப்படம் வெளியானது. இந்தப்படத்தில் அசோக் செல்வனுடன் நடிகைகள் ரிது வர்மா, நித்யா மேனன், நாசர் உள்ளிடோர் நடித்துள்ளனர்.