சென்னை : கேரள மாநிலம் எர்ணாகுளம் அலுவாவில் 1991ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி பிறந்தவர் நடிகை அமலாபால்.
இவர் சினிமாத்துறையில் வருவதற்கு முன்பாக மாடலிங் செய்துகொண்டிருந்தார். இவரை மலையாள இயக்குநர் லால் ஜோஸ் நீலத்தாமரா படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தினார். இந்தப் படத்தில் அமலாபால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
அதன்பிறகு தமிழில் சிந்துசமவெளி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்தப் படத்தில் அமலாபால் விமர்சிக்கப்பட்டார். இதனைத் தொடந்து இவர் மைனா படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
இந்தப்படம் தான் இவருக்கு தமிழ் சினிமாவில் தனிஒரு இடத்தை பிடித்து கொடுத்தது என்றே சொல்லலாம். இப்படத்தில் இவர் எந்த ஒரு ஒப்பனையும் இல்லாமல் ரியல் கிராமத்து பெண்ணாக நடித்திருப்பார்.
இதனைத் தொடந்து தெய்வ திருமகள், வேட்டை, தலைவா பேன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் நடிகையாக உயர்ந்தார். இவர் 'மேயாத மான்' படத்தின் இயக்குனர், ரத்னகுமார் இரண்டாவதாக இயக்கிய 'ஆடை' திரைப்படத்தில் மிகவும் போல்டு ஆன கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல கருத்துகள் கிடைத்தன. ஆனால் தேவை இல்லாமல் அமலா பாலை சில காட்சிகளில் ஆடை எதுவும் இல்லாமல் இயக்குனர் அலையவிட்டுள்ளார் என்பது போன்ற விமர்சனங்களும் எழுந்தன. இவர் தமிழ் மட்டுமல்லாது மலையாளம்,தெலுங்கு படங்களில் தொடந்து நடித்து வருகிறார்.
ஆடை படத்தில் நடிகை அமலாபால் இவர் தனது 30ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில் இவரது ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : ரசிகர்களை நோக்கி பாயும் தோட்டா மேகா!