அக்ஷரா ஹாசன், அக்டோபர் 12, 1991 அன்று சென்னையில் நடிகர்கள் கமல் ஹாசன்-சரிகா தம்பதிக்கு இரண்டாவது மகளாகப் பிறந்தார்.
சூர்யாவுடன் ஏழாம் அறிவு திரைப்படத்திலும், தனுஷுடன் 3 திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்த சுருதி ஹாசன் இவரது மூத்த சகோதரியாவார். அக்ஷரா ஹாசன் தனது பள்ளிப்படிப்பை சென்னையிலும், பின்னர் பெங்களூரு இண்டஸ் சர்வதேச பள்ளியிலும் பயின்றார்.
விவேகம்
2015ஆம் ஆண்டில் ஷமிதாப் என்ற இந்தி படத்தில் அமிதாப் பச்சன், தனுஷுடன் நடித்தார். இதற்கு முன்னதாக மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தும் தவிர்த்துவிட்டார்.
அக்சரா ஹாஸன்-சுருதி ஹாசன் பின்னர், தமிழில் அஜித் நடித்த விவேகம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர் கடாரம் கொண்டான் என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.
ரசிகர்கள் வாழ்த்து
தற்போது அவர் அக்னி சிறகுகள் என்ற திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்ற படத்திலும் நடித்துவருகிறார்.
அக்ஷரா ஹாசன் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிவரும் நிலையில் அவரது ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் அவரது சகோதரி சுருதி ஹாசன் சமூக வலைதளத்தில் அக்ஷராவுக்கு வாழ்த்துத் தெரிவித்து இருவரும் இருக்கும் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.
அக்ஷரா ஹாசன்-சுருதி ஹாசன் சுருதி ஹாசன் வாழ்த்து
அந்தப் பதிவில், "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்ஷரா ஹாசன். நீ என் செல்லம். நீ எங்களுக்காகச் சேமித்துவைத்திருக்கும் அனைத்தையும் நினைத்து நான் மிகவும் உற்சாகமடைகிறேன். நான் உன் அக்காவாக இருப்பதில் மிக்க மகிழ்ச்சி" எனப் பதிவிட்டுள்ளார். HBD அக்ஷரா ஹாசன்
இதையும் படிங்க : HBD சினேகா - புன்னகை அரசிக்குப் பிறந்தநாள்