தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

HBD ஐஸ்வர்யா ராய்: ரோபோவையும் காதலில் விழ வைத்த உலக அழகி! - என்றும் இளமை ஐஸ்வர்யா ராய்

நடிகை ஐஸ்வர்யா ராய் இன்று தனது 48ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில், திரைப் பிரபலங்களும் அவரது ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

hbd-aishwarya-rai-bachchan
hbd-aishwarya-rai-bachchan

By

Published : Nov 1, 2021, 11:55 AM IST

சென்னை: 1994ஆம் ஆண்டு ’உலக அழகி’ பட்டம் பெற்று ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்த ஐஸ்வர்யா ராய், தன் 48 வயதிலும் தன்னுடைய அழகிலும், ஃபேஷனிலும், ஸ்டைலிலும் தனி கவனம் செலுத்தி வருகிறார்.

கனவர் அபிஷேக் பச்சன், குழந்தை ஆராத்யாவுடன் ஐஸ்வர்யா ராய்

திருமணத்துக்கு பின்பும் பல இயக்குனர்களும் தேடிச் சென்று கதை சொல்லி, மீண்டும் திரையில் கொண்டு வர யத்தனிக்க வைக்கும் இந்திய நடிகைகளுள் ஐஸ்வர்யா ராயும் ஒருவர்.

ஐஸ்வர்யா ராய்

1997ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ’இருவர்’ திரைப்படத்தின் மூலம் திரை உலகுக்கு அறிமுகம் செய்யபட்ட ஐஸ்வர்யா ராய், தனது முதல் படத்திலேயே உச்ச நட்சத்திரம் மோகன்லாலுடன் இணைந்துப் பணியாற்றினார்.

ஐஸ்வர்யா ராய்

தொடர்ந்து தமிழில் ஜீன்ஸ், 2010ஆம் ஆண்டில் வெளிவந்த ’ராவணன்’, எந்திரன் திரைப்படத்தில் ரோபோவையும் காதலிக்க வைக்கும் ’சனா’ கதாபாத்திரம் ஆகியவற்றில் நடித்து ரசிகர்களைக் கொள்ளையடித்தார்.

ஐஸ்வர்யா ராய்

திருமணத்துக்குப் பிறகு தனது ஒவ்வொரு பிறந்தநாளையும் வெளிநாட்டில் ஐஸ்வர்யா ராய் கொண்டாடி வருகிறார். இந்நிலையில், இன்று தனது 48ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் அவருக்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : 'நான் நலமாக இருக்கிறேன்...' - ரஜினி வெளியிட்ட ’ஹூட்’ வாய்ஸ் நோட்!

ABOUT THE AUTHOR

...view details