பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளரான ஹார்வி வெய்ன்ஸ்டீன் இதுவரை 200 படங்களைத் தயாரித்துள்ளார். இவர், தன்னிடம் வாய்ப்பு கேட்டுவரும் நடிகைகளை பாலியல் ரீதியாக அணுகியதாக, ஏஞ்சலினா ஜோலி புகார் அளித்தார்.
அவருடன் இணைந்து 80க்கும் மேற்பட்ட மாடல் அழகிகளும், பாலியல் புகார் அளித்தனர். அப்புகாரின் அடிப்படையில் ஹார்வி வெய்ன்ஸ்டீன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அண்மையில் அவருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதையடுத்து, ரிக்கர்ஸ் தீவு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் சிறையில் உள்ள இவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து சிறை அலுவலர்கள் அவரை தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் தங்கவைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது கரோனாவில் இருந்து மீண்டுள்ளார். அவரை மீண்டும் சிறைக்கு அனுப்ப முடிவுசெய்யதுள்ளனர்.