தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விஜய் தேவரகொண்டாவுக்கு டஃப் கொடுப்பாரா ஹரிஷ் கல்யாண் - ஹரீஷ் கல்யாண் பிரியா பவானி சங்கர் இணையும் புதிய படம்

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ரித்து வர்மா ஜோடியாக நடித்து மாபெரும் வெற்றி பெற்ற 'பெல்லி சூப்லு' படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் பதிப்பில் ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

Harish Kalyan to act in pelli choopulu tamil remake
Harish Kalyan to act in pelli choopulu tamil remake

By

Published : Dec 11, 2019, 10:59 PM IST

ஏ ஸ்டுடியோஸ் எல்.எல்.பி, ஹவிஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று சென்னையில் தொடங்கியது. நடிகர் நாசர் கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைக்க, நாயகன் ஹரிஷ் கல்யாண், நாயகி ப்ரியா பவானி ஷங்கர் பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்த பூஜையில், படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர், தொழில் நுடபக் கலைஞர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து இயக்குநர் கார்த்திக் சுந்தர் கூறுகையில்,

'பெல்லி சூப்லு' படத்தை முதன்முதலாக பார்த்தபோது நான் பிரமித்துப் போனேன். குழந்தைப் பருவம் முதலே எனக்கு மிக நெருக்கமான நண்பனான ஹரிஷ் கல்யாணுக்கு உடனே போன் செய்து 'பெல்லி சூப்லு' படத்தை தமிழில் எடுத்தால் அதற்கு மிகவும் மிகப் பொருத்தமான நடிகன் நீதான் என்று தெரிவித்தேன். இப்போது நாங்கள் இருவரும் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறோம்.

படக்குழு

பிரியா பவானி சங்கரின் நடிப்பை பல படங்களில் பார்த்து ரசித்த எனக்கு, அவர் எந்த அளவுக்கு பரிபூரண நடிகை என்பது தெரியும். இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் அவருடனும் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன். இயற்கை சாராம்சம் மிக்க படம் என்று குறிப்பிடுவதால், நம் மண்ணின் மரபுக்கேற்ப திரைக்கதையில் சில மாற்றங்களையும் செய்திருக்கிறோம்." என்றார்.

இதையும் படிங்க: ராட்சசன் ஜிப்ரானுக்குக் குவியும் விருதுக
ள்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details