தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். ‘பியார் பிரேமா காதல், ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய படங்கள் இவர் நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு இவர் தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது ‘ஓ மணப்பெண்ணே’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்தில் செஃப் (chef) கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதால், முறையாக சமையல் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.