தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

புற்றுநோயால் கைவிடப்பட்டவர்களுக்கு உதவிய ஹரீஷ் கல்யாண்! - லேட்டஸ்ட் கோலிவுட் செய்திகள்

சென்னை: நடிகர் ஹரீஷ் கல்யாண் புற்றுநோயால் கைவிடப்பட்டவர்களுக்கு மூன்று லட்ச ரூபாய் கொடுத்து உதவிசெய்துள்ளார்.

ஹரீஷ் கல்யாண்
ஹரீஷ் கல்யாண்

By

Published : Sep 28, 2020, 10:06 PM IST

தமிழ்த் திரையுலகில் பிரபல நடிகராக வலம்வருபவர் ஹரீஷ் கல்யாண். இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி அவ்வப்போது தன்னால் முடிந்த உதவிகளை ஏழை, எளிய மக்களுக்குச் செய்துவருகிறார்.

இந்நிலையில், நடிகர் ஹரீஷ் கல்யாண் புற்றுநோயால் கைவிடப்பட்டவர்களுக்குத் தன்னால் முடிந்த உதவியை செய்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்டவர்களை இறுதி நிமிடம் வரை மிகுந்த அக்கறையுடன் பார்த்துக் கொள்ளும் ஸ்ரீமாதா புற்றுநோய் மருத்துவமனை நிறுவனத்தின் விஜயஸ்க்கு பாராட்டுகள்.

அவரின் 8 ஆண்டுகால சேவைக்கு என் சிறிய பங்களிப்பு பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். ஹரீஷ் கல்யாணின் இந்தச் சேவையைப் பலரும் பாராட்டியுள்ளனர்.

ஸ்ரீமாதா புற்றுநோய் மருத்துவமனை நிறுவனத்திற்கு நடிகர் ஹரீஷ் கல்யாண் மூன்று லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தீவிர ரசிகை மரணம் - துடிதுடித்துப் போன ஓவியா!

ABOUT THE AUTHOR

...view details