தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'கண்ணதாசன் குழந்தைக்கு அப்பா யாரு?' - 'தாராள பிரபு' கேட்கும் கேள்வி - ஹரீஷ் கல்யாண் நடிக்கும் தாராள பிரபு

செயற்கைக் கருத்தரிப்புக்காக விந்து தானம் செய்யும்போது ஏற்படும் குளறுபடிகளை காமெடியாக சொல்லும் படமாக அமைந்துள்ள தாராள பிரபு படத்தின் டீஸர், 'கண்ணதாசன் குழந்தைக்கு அப்பா யாரு?' என்ற கேள்வியுடன் அமைந்துள்ளது.

Dharala Prabhu movie teaser
Harish kalyan in Dharala Prabhu

By

Published : Jan 30, 2020, 7:21 AM IST

Updated : Jan 30, 2020, 7:30 AM IST

சென்னை: ஹரீஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியிருக்கும் 'தாராள பிரபு' படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் ஹரீஷ் கல்யாண் ஜோடியாக தன்யா ஹோப் நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்துக்கு அனிருத், விவேக்-மெர்வின், கபீர் பாஸ்கர், இன்னோ கங்கா, ஷான் ரோல்டன், மேட்லி புளூஸ், பரத் ஷங்கர், ஊர்க்கா ஆகிய எட்டு பேர் இசையமைத்துள்ளனர். படத்தை கிருஷ்ணா மாரிமுத்து இயக்கியுள்ளார்.

பாலிவுட்டில் ஆயுஷ்மான் குர்ரானா - யாமி கெளதம் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'விக்கி டோனர்' படத்தின் ரீமேக்காக தாராள பிரபு படம் உருவாகியுள்ளது. விந்து தானம் பற்றி எடுத்துக்கூறும் கதையம்சத்தில் அமைந்துள்ள இந்தப் படம், செயற்கைக் கருத்தரிப்புக்காக விந்து தானம் செய்யும்போது ஏற்படும் குளறுபடிகளை காமெடியான திரைக்கதையுடன் சொல்கிறது.

இந்தப் படத்தின் டீஸரை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 'கண்ணதாசன் குழந்தைக்கு அப்பா யாரு?' என்ற கேள்வியுடன் அமைந்திருக்கும் டீஸரானது சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டுவருகிறது.

Last Updated : Jan 30, 2020, 7:30 AM IST

ABOUT THE AUTHOR

...view details