ஹரீஷ் கல்யாண்-ப்ரியா பவானி சங்கர் காதலித்துவருவது போன்று வெளியிட்ட புகைப்படங்களால், கடந்த இரண்டு நாள்களாக சமூக வலைதளங்களில் பெரும் குழப்பம் நிலவிவந்தது. பிறகு அது காதல் இல்லை என்றும் அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்துள்ள ’பெல்லி சூப்புலு’ ரீமேக் திரைப்படத்தின் புரோமஷன் என்பதும் தெரியவந்தது.
இத்திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய போஸ்டரை நடிகர் விஜய் தேவரகொண்டா நேற்று (அக். 01) தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். ’ஓ மணப்பெண்ணே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள படத்தின் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது. கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ள இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.