தமிழ் சினிமாவில் வெற்றி நாயகனாக முத்திரைப் பதித்து வரும் நடிகர் அருண்விஜய்யின் 33ஆவது திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்தை வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிப்பில் இயக்குநர் ஹரி இயக்குகிறார். பிரமாண்டமாக உருவாகும் இந்தப் படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
அருண் விஜய்யின் 33ஆவது படம் பூஜையுடன் தொடக்கம்! - ஹரி - அருண்விஜய் படத்தின் ஷூட்டிங்
சென்னை: அருண் விஜய்யின் 33வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்த படத்தை இவரது உறவினரும் இயக்குநருமான ஹரி இயக்குகிறார்.
![அருண் விஜய்யின் 33ஆவது படம் பூஜையுடன் தொடக்கம்! ஹரி - அருண்விஜய் படத்தின் ஷூட்டிங் துவங்கியது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10853490-970-10853490-1614765613152.jpg)
இந்தப் படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் இணைகிறார். படத்தின் முன்னணி கதாபாத்திரங்களில் பிரகாஷ்ராஜ், யோகிபாபு, ராதிகா, அம்மு அபிராமி, ராஜேஷ், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி,போஸ் வெங்கட், ‘குக் வித் கோமாளி’ பிரபலம் புகழ், ராமசந்திர ராஜூ, ஐஸ்வர்யா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.
தொடர்ந்து வரும் 16ஆம் தேதி முதல் பழநியில் படப்பிடிப்பு தொடரும் என்றும் ராமேஸ்வரம், ராம்நாடு , தூத்துக்குடி, காரைக்குடி, சென்னை ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி இந்தப் படத்தின் மூலம் சேவல் படத்திற்கு பிறகு இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஹரியுடன் இணைந்து பணியாற்ற உள்ளார். படத்தை சக்திவேல் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படம் திரில்லர் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.