தமிழ் திரையுலகில் 46ஆவது ஆண்டை கடந்து உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சென்ற தீபாவளி அன்று வெளியான அண்ணாத்த கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வியாபார ரீதியாக பெரும் வசூலைக் குவித்தது.
இன்று (டிசம்பர் 12) தனது 71ஆவது பிறந்தாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மாருமேல சூப்பர் ஸ்டார்
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிகர் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், ரஜினியை அவர் நெஞ்சில் பச்சைக்குத்திய புகைப்படத்தை பதிவிட்டு, "என் மாருமேல சூப்பர் ஸ்டார்; 80's பில்லாவும் நீங்கள் தான்; 90's பாட்ஷாவும் நீங்கள் தான்; 2K அண்ணாத்த நீங்கள் தான். சினிமா பேட்டையோட ஒரே சூப்பர் ஸ்டார் தலைவா ரஜினிகாந்த்-க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ரஜினி திரைப்படங்கள் தமிழ்நாடு, இந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலும் வெற்றி நடைப்போடுவது அனைவரும் அறிந்ததே. அதனால், பஞ்சாப்பை சேர்ந்த ஹர்பஜன் சிங்கிற்கு ரஜினி ஆதர்சமாக அமைந்ததில் எந்த ஆச்சர்யமுமில்லை. தற்போது ஹர்பஜன் சிங் தமிழ் திரைப்படங்களில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: #HBDSuperstarRajinikanth - இவன் திரையுலகை அதிரவைத்த அதிரடிக்காரன்