தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஹர்பஜன் சிங்கின் ஆக்ஷன்; சதீஷின் காமெடி: வெளியான 'பிரண்ட்ஷிப்' பட டீஸர்! - ஹர்பஜன் சிங் படம்

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் நடிப்பில் உருவாகிவரும் 'பிரண்ட்ஷிப்' படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.

FriendShip Movie
FriendShip Movie

By

Published : Mar 1, 2021, 10:17 PM IST

ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்கிய ஹர்பஜன், தமிழில் ட்வீட் செய்வது, தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இவர் தற்போது 'பிரண்ட்ஷிப்' என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி உள்ளார். சந்தானத்தின் ‘டிக்கிலோனா’, தமிழ் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ள ஹர்பஜன், ‘அக்னி தேவி’ படத்தை இயக்கிய ஜேபிஆர் - சாம் சூர்யா இயக்கத்தில் உருவாகும் ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் தமிழ் படத்தில் முன்னணி கதாபாத்திரமாக நடிப்பது இதுவே முதல்முறையாகும். இந்தப் படத்தை பி.ஸ்டாலின், ஜேபிஆர் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் 'பிக்பாஸ் புகழ்' லாஸ்லியா, ஆக்ஷன் கிங் அர்ஜூன், சதீஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில், 'பிரண்ட்ஷிப்' படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் கல்லூரி வளாகத்தில் இரண்டு தரப்பினர்களுக்கு இடையே நடக்கும் சண்டைகளும் அரசியல்வாதிகளின் சதி திட்டமும் அதிரடியான ஆக்ஷன் காட்சியுடன் நகைச்சுவையாக காண்பிக்கப்பட்டுள்ளது. டீஸரின் இறுதியில் ஹர்பஜன் சிங்கிடம் சதீஷ், 'கிரிக்கெட் விளையாட தெரியுமா...எதும் சந்தேகம் இருந்தால் என்னிடம் கேள்' என கேட்பது போல் முடிகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாகிறது. டீஸர் வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் சமூக வலைதளத்தில் இதற்கு வரவேற்பு அளித்துள்ளனர்.

ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட டீஸருக்கு சுரேஷ் ரெய்னா, விவிஎஸ் லட்சுமணன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கோலிவுட் கோட்டையில் பிரண்ஷிப் வைக்க வந்த ஹர்பஜன்

ABOUT THE AUTHOR

...view details