நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் இன்று (ஏப்ரல் 17) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
விவேக் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஓர் உதாரணம் - ஹர்பஜன் சிங் - நடிகர் விவேக் மறைவு
சென்னை: விவேக் வாழ்கை மற்றவர்களுக்கு உதாரணம்..பூமி உள்ள வரையில் அவர் கலை பேசும், அவர் நட்ட மரங்கள் பேசும் என இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஹர்பஜன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
![விவேக் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஓர் உதாரணம் - ஹர்பஜன் சிங் Vivek](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11437242-557-11437242-1618652110187.jpg)
Vivek
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், "விவேக் சார் உங்களை எப்படி போற்றினாலும் அது குறைவாக தான் இருக்கும். யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்ற பழமொழி உங்களுக்கும் பொருந்தும், நீங்கள் வாழ்ந்த வாழ்கை மற்றவர்களுக்கு ஓர் உதாரணம்..பூமி உள்ள வரையில் உன் கலை பேசும் நீ நட்ட மரங்கள் பேசும்" என பதிவிட்டுள்ளார்.