தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளருடன் நடிக்கவில்லை - ஹன்சிகா மறுப்பு! - tamil cine news

சரவணா ஸ்டோர்ஸ் துணிக்கடை உரிமையாளர் அருள் உடன் ஹன்சிகா இணைந்து நடிப்பதாக வெளியான செய்தி பொய் என ஹன்சிகா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Hansika Motwani

By

Published : Oct 3, 2019, 10:38 PM IST


மிகக் குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துத் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தற்போது மஹா, பார்ட்னர் மற்றும் பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடித்துவரும் ஹன்சிகா, சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருளுடன் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. இச்செய்தியை மறுத்து ஹன்சிகா தன் ட்விட்டர் பக்கத்தில் தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் தான் அருளுடன் நடிப்பதாகப் பத்திரிக்கை ஒன்றில் வெளியிடப்பட்ட செய்தி ஒன்றைப் பகிர்ந்து 'இது உண்மையல்ல’ எனும் தகவலைப் பகிர்ந்து இவ்வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தார்.

நடிகை ஹன்சிகா மோத்வானி முன்னதாக சரவணா ஸ்டோர்ஸின் அதிபர் அருளுடன் இணைந்து சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரப் படம் ஒன்றில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details