குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகும் நபர்கள், பின்பு சினிமாவில் வெற்றி பெறும் நபர்களாக மாறுவது வழக்கம்.
அந்தவகையில் 'ஷகலக பூம் பூம்' தொடரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஹன்சிகா இன்று திரைத்துறையில் கொடிக் கட்டி பறந்துவருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்துவருகிறார்.
50 படங்கள் நிறைவு
கடந்த 2003ஆம் ஆண்டு முதல் திரைத்துறையில் நடித்துவரும் ஹன்சிகா தற்போது 50 படங்களை நடித்து முடித்துள்ளார். அவரது 50ஆவது படமான, 'மஹா' படம் தொடங்கிய நாள் முதலே பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இருப்பினும் சற்றும் தளராமல் படத்தில் நடித்து முடித்துள்ளார் ஹன்சிகா.
படத்தில் நடிக்க ஆரம்பித்த புதிதில் உடல் எடை சற்று அதிகம் இருந்ததால், குட்டி குஷ்பு என ரசிகர்களால் அழைக்கப்பட்டார். அதற்குப் பிறகு தற்போது உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.