தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'தேவசேனா'பட இயக்குநருடன் கைகோர்த்த 'சின்ன குஷ்பு'! - ஹன்சிகாவின் இணையத்தொடர்

தென்னிந்திய நடிகைகள் பலர் தற்போது வடஇந்திய நடிகைகளைப் போல இணையத்தொடரில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். சமீபத்தில் அமலாபால் இணையத்தொடரில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவரைப் போன்று நடிகை ஹன்சிகாவும் புதிய இணையத் தொடர் ஒன்றில் நடிக்க உள்ளார்.

hansika

By

Published : Oct 14, 2019, 9:16 AM IST

'பாகமதி' பட இயக்குநர் அசோக் இயக்கும் இணையத் தொடரில் நடிகை ஹன்சிகா நடிக்க உள்ளார்.

ஹன்சிகா தற்போது 'மஹா' படத்தில் நடித்து வருகிறார். மேலும் யோகி பாபு நடித்த 'தர்ம பிரபு' படத்தைத் தயாரித்த ஸ்ரீவாரி பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த த்ரில் படத்தில் ஹன்சிகா நடிக்கவுள்ளார்.

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தில் ஹன்சிகா இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.

இந்த திகில் கலந்த நகைச்சுவைப்படத்தை தமிழில் வெளியான முதல் ஸ்டீரியோஸ்கோபிக் 3டி படமான 'அம்புலி' இயக்குநர்கள் ஹரி ஷங்கர் - ஹரீஷ் நாரயணன் இயக்கவுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் சென்னையில் நடைபெறவுள்ளதாகவும் அடுத்த ஆண்டு சம்மரில் வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஹன்சிகா பாகமதி பட இயக்குநர் அசோக் இயக்கும் இணையத்தொடரில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்தத் தொடரானது விறுவிறுப்பான திகில் தொடராக தயாரிக்க உள்ளதாகவும் நிச்சயம் ரசிகர்கள் இதனை வரவேற்பர் என்றும் படக்குழு நம்பியுள்ளது.

ஏற்கனவே இணையத்தொடரில் நடிகைகள் அஞ்சலி, அமலாபால் ஆகியோரைத் தொடர்ந்து தற்போது ஹன்சிகாவும் இணைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க: ஹன்சிகாவின் திகில் படத்தில் வில்லனாக மாறிய கிரிக்கெட் வீரர்

ABOUT THE AUTHOR

...view details