ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் நடிகை ஹாலே பெர்ரி தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதற்காக அவர் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயின்று வருகிறார். இதில் சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கி கொண்டிருக்கையில் ஹாலே பெர்ரிக்கு எதிர்பாராவிதமாக காயம் ஏற்பட்டுள்ளது.
'சிக்ஸ் பேக்' நடிகை ஹாலே பெர்ரிக்கு திடீர் காயம்! - ஹாலிவுட் நடிகை ஹாலே பெர்ரி
ஹாலிவுட் நடிகை ஹாலே பெர்ரி படப்பிடிப்பின் போது காயமடைந்தார்.
!['சிக்ஸ் பேக்' நடிகை ஹாலே பெர்ரிக்கு திடீர் காயம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5113896-608-5113896-1574174030859.jpg)
Halle Berry
இதனையடுத்து படக்குழுவினர் அவருக்கு முதலுதவி அளித்து சிகிச்சைக்காக மருத்துவமைனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் பிரையன் பிட் கூறுகையில், ஹாலே பெர்ரிக்கு தீவிரமான காயம் எதுவும் ஏற்படவில்லை. தற்போது சிகிச்சை பெற்று வரும் அவர் சில நாட்கள் ஒய்வெடுத்து பின் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துக்கொள்வார் என்றார்.
சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஹாலே, சமீபத்தில் சிக்ஸ் பேக்குடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்திருந்தது கூடுதல் தகவல்.