'ஈட்டி' பட இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஐங்கரன்'. இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடிகை மகிமா நம்பியார் நடிக்கிறார்.
அரசு நம்மள எப்படி பாக்குதுன்னு தெரியுமா - 'ஐங்கரன்' ஆவேசம்! - dhanush
ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் 'ஐங்கரன்' படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.
மேலும் இவர்களுடன் காளி வெங்கட், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தை காமன்மேன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக மட்டுமல்லாது இசையமைக்கிறார். சரவணன் அபிமன்யூ ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், அரசு நம்மள டேட்டாவா பாக்குது; அரசியல்வாதி நம்மள் ஓட்டா பாக்குறான்; வியாபாரி நம்மள கஸ்டமரா பாக்குறான். யாரும் யாரையும் இங்க மனுசனாவே பாக்குறதில்ல உள்ளிட்ட வசனம் பெரும் ஈர்பை ஏற்படுத்தி உள்ளது. ட்ரெய்லர் வெளியான சில நிமிடங்களிலேயே இணையத்தை கலக்கி வருகிறது. ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தி உள்ளது.