தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஜி.வி. பிரகாஷின் 'பேச்சுலர்' படப்பிடிப்பு நிறைவு - ஜிவி பிரகாஷின் பேச்சுலர் பட

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகிவரும் 'பேச்சுலர்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

பேச்சுலர்
பேச்சுலர்

By

Published : Oct 6, 2020, 7:52 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி. பிரகாஷ் 'டார்லிங்' படம் மூலமாக நடிகராக தனது திரைப்பயணத்தை தொடங்கினார். அதைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துவருகிறார்.

நடிகராக ஒரு பக்கம் வலம் வந்தாலும் மறுபக்கம் இசையமைப்பாளராகவும் பல்வேறு படங்களுக்கு இசையமைத்துவருகிறார்.

அசெஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில், சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் பேச்சுலர் என்னும் படத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துவருகிறார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வெளியிட்டிருந்தார். இப்படத்தில் திவ்யபாரதி என்னும் நடிகை அறிமுகமாக உள்ளார்.

இந்நிலையில் கடந்த 15 நாள்களாக சென்னை பெங்களூருவில் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் நடைபெற்றுவந்தன. இன்று (அக்டோபர் 6) இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்துவிட்டதாக ஜி.வி. பிரகாஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details