தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பேயதான் காதலிச்சேனா? - 'ஆயிரம் ஜென்மங்கள்' ட்ரெய்லர் வெளியீடு! - Aayiram Jenmangal movie trailer

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'ஆயிரம் ஜென்மங்கள்' திகில் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Aayiram jenmangal
Aayiram jenmangal

By

Published : Dec 14, 2019, 1:05 PM IST

ஜி.வி.பிரகாஷ் - எழில் கூட்டணியில் திரைக்கு வரவுள்ள படம் 'ஆயிரம் ஜென்மங்கள்'. திகில், காமெடி கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் ஈஷா ரெப்பா, நிகிலேஷ் பட்டேல், சதீஷ், ஆனந்தராஜ், நான் கடவுள் ராஜேந்திரன், ஆடுகளம் நரேன், மனோ பாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதை தொட்டு, வெள்ளக்காரதுரை, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் உள்ளிட்ட காமெடி, காதல் திரைப்படங்களை இயக்கிய எழில், இந்தமுறை திகில் கற்பனை கதையை கையில் எடுத்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷின் 'ஆயிரம் ஜென்மங்கள்'

அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ரமேஷ் பி பிள்ளை தயாரிக்கும் இப்படத்திற்கு சி.சத்யா இசையமைத்துள்ளார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப்படம் வரும் 20ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இதன் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

2 நிமிடம் திகில் இருட்டில் மிரட்டும் வகையில் அமைந்துள்ள இப்படத்தின் ட்ரெய்லரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். படக்குழுவுக்கு தனது வாழ்த்துகளையும் நடிகர் தனுஷ் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க...

" IFFK " விழாவில் விருதுகள் அள்ளிய ஜல்லிக்கட்டு, ஆனி மானி, கும்பளங்கி நைட்ஸ்!

ABOUT THE AUTHOR

...view details