லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘கைதி’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தாயரித்துள்ள இப்படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ள இதன் ட்ரெய்லர் நேற்று வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிறச் செய்திருக்கிறது. இந்த ட்ரெய்லரைப் பார்த்த இயக்குநர் கௌதம் மேனன், ’கைதி’ படம் பார்ப்பது பற்றிய தனது ஆர்வம் குறித்து பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
’கைதி’ ட்ரெய்லர் பார்த்து அசந்துபோன கௌதம் மேனன்! - கைதி பற்றி கௌதம் மேனன்
கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘கைதி’ படத்தின் ட்ரெய்லரைப் பார்த்து அசந்துபோன இயக்குநர் கௌதம் மேனன், படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

kaithi
இதுகுறித்து கௌதம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சுவாரஸ்யமான மாஸான கதை, பத்து வருசம் உள்ள இருந்தேன்னு மட்டும்தானே தெரியும். உள்ள போறதுக்கு முன்னாடி என்ன பண்ணிட்டு இருந்தேன் தெரியாதுல... ( கைதி வசனம்). படத்தை பார்க்க இனியும் காத்திருக்க முடியாது. விஜய் 64 படத்துக்கும் வாழ்த்துகள் லோகேஷ் கனகராஜ்’ என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் வாசிங்க: ‘ஜனநாயகத்தின் பக்கம் நீதியை நிலைநிறுத்த வேண்டும்’ - கமல்ஹாசன்
Last Updated : Oct 8, 2019, 6:04 PM IST